BREAKING NEWS
latest

Kuwait News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Kuwait News News, Articles, Kuwait News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Monday, March 24, 2025

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் இந்திய சமூகத்தினருடன் நெருக்கம் பேணிவந்த நபருமான காலித் அல்-ஜரல்லா காலமானார்

Image : காலித் அல்-ஜரல்லா அவர்கள்

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சருமான காலித் அல்-ஜரல்லா(வயது-78) அவர்கள் இரவு காலமானார். அவர் 1971 ஆம் ஆண்டு குவைத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தில் வேலைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் பல்வேறு வெளியுறவுத்துறை பதவிகளை வகித்ததை தொடந்து, 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் ஆவதற்கு முன்னதாக 1972 முதல் 1974 வரை லெபனானுக்கான குவைத்தின் தூதராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் குவைத்துக்குத் திரும்பிய பிறகு, வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் 1974 முதல் 1987 வரை அரபு விவகாரப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1987 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் விவகாரங்களுக்கான துறையின் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

1999 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 2021 இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்துடனும், இந்திய தூதரகத்துடனும் அவர் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த சிறந்த நபர் என்பது அமைப்புகளில் இயங்கி வருகின்ற இந்தியர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Foreign Minister | Indian Community | Kuwait Minister

Add your comments to Kuwait News

Sunday, March 23, 2025

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஈத் தொடர் விடுமுறை 9 நாட்கள் கிடைக்குமா அல்லது 5 நாட்களாக சுருங்குமா என்பது பிறை தென்படும் தேதியை பொறுத்து இந்த வருடம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது

Image : குவைத் சிட்டி டவர்

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்த ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும் என்ற கனவில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பேரிடியை கொடுத்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டிற்கான ஈத் விடுமுறை மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆனால் மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே ஈத் விடுமுறை எப்போது முடிவடைகிறது என்பதை அறிய முடியும். மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தென்பட்டால் மார்ச் 28 மற்றும் 29 வார விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் வரையிலான 3 நாட்கள் ஈத் விடுமுறை உட்பட தொடர்ந்து 5 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இதை தொடந்து ஏப்ரல்-2,2025 புதன்கிழமை முதல் வேலை நாள் தொடங்கும்.

ஆனால் மார்ச்-29,2025 அன்று பிறை தென்படாத சூழ்நிலை ஏற்பட்டால் மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல்-3,2025 வியாழன் வரை தொடர்ந்து 5 நாட்கள் வரை பொது விடுமுறையும், விடுமுறை தொடங்குவதற்கும் முன்னரும்-பின்னரும் உள்ள 4 நாட்கள் வார விடுமுறை உட்பட 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், இதையடுத்து ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும். இதில் டிஸ்ட் எங்கே என்று தானே கேட்கிறீங்க....??? மீதியை படியுங்கள் புரியும்......

அதாவது ஏப்ரல் 2 வேலை நாளா இல்லையா என்பதை அறிய ஊழியர்கள் மார்ச் 29 சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் சிவில் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி ஏப்ரல் 2, 3(புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் விடுப்பு எடுப்பவர்கள் வருகின்ற மார்ச்-27 வியாழக்கிழமைக்குள் விடுப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்பு விடுப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு, அவசரகால விடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி விடுமுறை எடுத்து நழுவும் நபர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் கட்டுபாடு விதித்துள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே பெற முடியும் என்று கமிஷன் தடை விதித்துள்ளது.

அதேபோல் அவசரகால விடுப்பு ஒரு நாள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவசர விடுமுறை அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்த நாட்களில் பணிக்கு வராத ஊழியர்களின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடுமுறை பதிவு செய்யப்படும் என்றும், இந்த நாட்கள் வருடாந்திர விடுப்பில் இருந்து கழிக்கப்படும் எனறும் அறிவிக்கையில் எச்சரித்துள்ளது. எங்களுக்கு கிடைக்காத 9 நாட்கள் தொடர் விடுமுறை உங்களுக்கு மட்டும் எதுக்குடா....??? என்ற தனியார் கம்பெனி ஊழியர்கள், வீட்டு பணியாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களின் குமுறல் சத்தம் சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு கேட்டிருக்குமோ.....????

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Official Holiday | Eid Holidays | Kuwait Csc

Add your comments to Kuwait News

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத் காவல்துறை அதிரடி நடவடிக்கையின் விளைவாக கடந்த வாரம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தொழிலாளியை கொலை செய்த குடிமகன் கைது செய்யப்பட்டார்

Image: தொழிலாளி வண்டி ஏற்றி கொலை செய்யபட்ட இடம்

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத்தின் முட்லா பகுதியில் மொபைல் பக்காலாவில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தாமல் வாகனத்தில் கடக்க முற்பட்டபோது தடுக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர் வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் குவைத் குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இது தொடர்பான செய்தி கடந்த வாரம் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம் வாசகர் பல படித்திருப்பீர்கள்.

நாட்டின் குற்றப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஹமீத் அல்-தவாஸ் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை நடத்தி விசாரணையில், ஒரே வாரத்தில் குற்றவாளி பிடிபட்டார். குற்றவாளி குவைத் குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் பக்கலாவை(கடைகளை) குறிவைத்து கடந்த காலங்களில் இது போன்ற பல குற்றங்களைச் செய்திருப்பதும் விசாரணை யில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த குற்ற சம்பவங்களில் எதுவிலும் ஊழியர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுத்தவில்லை. பலருக்கும் காயத்தை இவர் ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி ஜஹ்ரா கவர்னரேட்டின் அல்-முட்லா பகுதியில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி, உயிரிழந்த தொழிலாளி வேலை செய்யும் மொபைல் பக்காலாவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். இதையடுத்து கடையின் ஊழியர் குற்றவாளியை தடுத்து நிறுத்த வாகனத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் குற்றவாளி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் ஊழியர் வாகனத்தின் நடுவில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஜஹாரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களும் தெரியவில்லை.

இதையடுத்து குற்றவாளி சில்வர் நிற நான்கு சக்கர வாகனத்தில் பக்காலாவில் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவானது. நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் 15 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சுலைபியா பகுதியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் ஜஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி இதுவரை செய்த குற்றங்கள் தொடர்பாக தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

Add your comments to Kuwait News

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி இனிமுதல் 5 வருடங்களாக இருக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : குவைத் ஓட்டுநர் உரிமத்தின் மாதிரி புகைப்படம்

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 425/2025 மற்றும் 76/1981 இன் கீழ் உள்ள பிரிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு திருத்தப்பட்ட புதிய சட்டம் இன்று(23/03/25) ஞாயிறுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

புதிய சட்டத்தின்படி பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் மற்றும் பயன்பாட்டு வரம்புகள் மாறும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் புதிய சட்டப்படி 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டப்படி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவரின் குடியிருப்பு அனுமதியின்(விசா காலவதியை) கால அளவை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டினருக்கு இவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த சட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டு 5 வருடங்களாக காலவதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், குடிமக்களுக்கு 15 ஆண்டுகளும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு(பிதூனி) தங்களுடைய அடையாள அட்டையின் காலாவதி அடிப்படையிலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும். மேலும் தற்போது ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait License | Indian Worker

Add your comments to Kuwait News

Tuesday, November 12, 2024

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

குவைத்தில் விசா ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது

Image : குவைத் அமீர்

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவியான இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை(வாழ்நாள் முழுவதும் சிறை) பெற்று குவைத்தில் சிறையில் இருந்தார். குவைத் அமீரின் கருணையால், ராஜராஜன் என்ற அந்த இளைஞர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, ராஜராஜன் நாடு திரும்ப உள்ளார். கடந்த அக்டோபர்-26,2016 அன்று,ஒரு முகவர் மூலம் ராஜராஜன் குவைத்தில் வேலைக்காக வந்தார்.

இது ராஜராஜனின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஆனால் குவைத்துக்கு வந்த அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராஜராஜன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, குவைத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் வரை அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இந்தியா, தமிழ்நாடு, திருச்சி ஸ்ரீரங்கம் அயிலப்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜராஜன்.

தனது நண்பர் அப்துல்லா மூலம், குமரேசன் என்ற முகவர் வழியாக, ராஜராஜன் குவைத்துக்கு காதீம்(வீட்டு வேலை) விசாவை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-22, 2016 அன்று, குமரேசனுடன் குவைத் வருவதற்காக சென்னை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாள் குமரேசன் ராஜராஜனின் உடைமைகள் இருந்த பைகளுக்குப் பதிலாக புதிய பெட்டியில் பொருட்கள் நிரப்பப்பட்டு, அத்துடன் கைப்பையையும் வழங்கினார். இதுகுறித்து ராஜராஜன் சந்தேகம் தெரிவித்தபோது,பழைய பெட்டி மோசமாக இருக்கிறது, வெளிநாடு செல்கிறாயே எனவே புதிய பெட்டியை கொடுத்ததாக குமரேசன் பதிலளித்தார். இதை தொடர்ந்து கைப்பையைத் திறந்து பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டைக் காட்டினார்.

இதை தொடர்ந்து குமரேசன் ராஜராஜன் பொருட்கள் இருந்த பையில் ராஜராஜனின் உடைமைகள் தான் இருக்கிறது என்பதை லக்கேஜ் பையை திறந்து காட்ட தயாராக இருக்கவில்லை, இதற்க்கு அவர் கூறிய காரணம் விமானம் புறப்பட நேரமாகி விட்டதால் லக்கேஜ் பையைத் திறக்க நேரமில்லை என்று ராஜராஜனிடம் கூறினார். அன்று மாலையே ராஜராஜன் சென்னையில் இருந்து குவைத் திரும்பினார். மறுநாள் குவைத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜராஜன் பெட்டியில் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் நாட்டில் தான் கைது செய்யப்பட்டது தெரிந்தது. ராஜராஜனுக்கு என்ன நடந்தது என்றோ, எதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்தார்கள் என்றோ புரியவில்லை. ராஜராஜனுக்கு விஷயங்கள் புரிய இரண்டு வாரங்கள் ஆனது. உடனே நாட்டில் உள்ள தன்னுடைய ஒரே தங்கையான அன்பரசியை அழைத்து தன் நிலையை விளக்கினார். குமரேசன் வீட்டிற்கு சென்றாள் ஆனால் அது பூட்டியிருந்தது. அவரது மாமா பழனியின் வீட்டிற்குமு தேடி சென்றார் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு குமரேசன் தான் காரணம் எனக் கூறி, நண்பர் அப்துல்லாவும் கைவிரித்தார்.ராஜராஜனின் சகோதரி அன்பரசி சென்னையில் உள்ள வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளையை அணுகினார். அவர்களின் ஒத்துழைப்புடன், தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரின் விடுதலைக்காக குவைத் மனித உரிமைச் சங்கத்திடம் அவர் முறையிட்டார்.

தமிழக அரசின் துணைச் செயலாளர் செந்தில் குமார், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். குவைத்துக்கான அப்போதைய இந்திய தூதர் ஜீவா சாகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதன்மை செயலாளரும், சமூக நலத்துறை அதிகாரியுமான பி.பி.நாராயணனுக்கு உத்தரவிட்டார். பி.பி.நாராயணன் குவைத் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய குவைத் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ராஜராஜன் நிரபராதி என நம்ப வைக்க தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பலனாக, 2017ல், சிறைக் கைதிகளுக்கு அமீர் வழங்கிய தளர்வு பட்டியலில், ராஜராஜனும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆயுள் தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்

மேலும் ராஜராஜன் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை அறிக்கைகளும், அவரது தண்டனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுத்தன.தற்போது அவரை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூதரகத்திலிருந்து அவுட்பாஸும் வழங்கப்பட்டது. கடந்த நாள், ராஜராஜன் நாட்டு கடத்தல் மையத்தில் இருந்து தனது சகோதரிக்கு போன் செய்து தான் வீடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவித்தார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்,எட்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு குவைத் அமீரின் தயவில் ராஜராஜன் விரைவில் அடுத்த சில தினங்களில் தாயகம் திரும்புவார்.

குவைத்தில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிக்கு தண்டனைகள் பின்வருமாறு வழங்கபடும். இதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு அதிகபட்ச தண்டனையை குவைத் நீதித்துறை வழங்குகிறது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை(வாழ்க்கையின் இறுதி வரை சிறையில்) , மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கபடுகிறது. இந்த பட்டியலில் உள்ள வழக்கில் தான் சேர்க்கப்பட்டார் ராஜராஜனும். மேலும், போதை மருந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ராஜராஜனை சிக்கவைத்த இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முகவர் மீது எந்த வழக்கும் இல்லை, அதேபோல் முக்கிய குற்றவாளியான குமரேசன், அப்துல்லா மீதும் எந்த வழக்கு இல்லை. அண்ணனை பொய் வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அன்பரசி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிக செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குவைத் மனித உரிமைகள் சங்கத்தின் உறுப்பினரான ஆல்வின் ஜோஸ், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆன்லைனில் புகார் செய்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் இவர்கள் மீது இதுவரை எடுக்கப்படவில்லை. பிறகு எப்படி ஊரில் உள்ள இதுபோன்ற போலியான ஏஜென்சிகளை நடத்தும் நபர்களுக்கு எப்படி பயம் வரும். இப்படி சிக்க வைக்கின்ற தாயகத்தில் உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதமான மனசாட்சியற்ற செயல்கள் ஓரளவாவது குறையும்.

ஒருவருக்கு மரணதண்டனை வரையில் கிடைக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்கின்ற நபர்களுக்கும் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கு வ‌ளைகுடா நாடுகளில் வழங்குகின்ற அதே தண்டனையை தாயகத்தில் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரதும் வேண்டுகோளாக உள்ளளது. இதுபோன்ற வழக்குகளில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அப்பாவிகளான தன்னுடைய உடன் பிறப்புகளை சட்டபடி மீட்க புகார்களுடன் பலர் அணுகுகிறார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுப்பதில்லை, இது வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடு செல்பவர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதை மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait Emir | Indian Worker

Add your comments to Kuwait News

Sunday, November 10, 2024

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது

Image credit:இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தின் புகைப்படம்

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெண்கலயுகத்தில் தில்முன் கலாச்சாரத்திற்கு முந்தைய காலத்தில் அங்கிருந்ததாக நம்பப்படும் ஒரு கோவிலின் எச்சங்களை குவைத்தின் ஃபைலாகா தீவு பகுதியிலிருந்து டேனிஷ் தொல்பொருள் ஆய்வுக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

அரேபிய வளைகுடாவில், முக்கியமான கலாச்சார, வர்த்தகம் மற்றும் சமூக பாரம்பரியத்தை புதிய கண்டுபிடிப்பு எடுத்துக்காட்டுகிறது. குவைத் தேசிய கலாச்சார, கலை மற்றும் இலக்கிய கவுன்சிலின்(என்.சி.சி.ஏ.எல்) உதவி பொதுச்செயலாளர் முஹம்மது பின் ரேடா ஒரு செய்திக்குறிப்பில் நேற்று(09/11/2024) சனிக்கிழமை மாலையில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

ஃபைலாகா தீவில் அமைந்துள்ள பழமையான அரண்மனையின் கிழக்குப்பகுதியில் நடத்திய தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த கோயிலின் எச்சங்கள்(சிதைந்த பாகங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. முன்னதாக, மற்றொரு கோவிலின் எச்சங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்முன் என்பது கிருஸ்துவுக்கு முன்பு(கிமு)3 மில்லினியத்தில் இருந்து கிழக்கு அரேபியாவில் பண்டைய செமிடிக் மொழி பேசும் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

அவர்களின் மதம் மற்றும் பாரம்பரியமான பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதில் புதிய கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குணாவும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait News | Kuwait Temple

Add your comments to Kuwait News

Tuesday, September 24, 2024

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது

Image : புதிய கட்டணம் வசூலிக்கப்பட்ட ரசீது

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

குவைத்துக்கான விசா ஸ்டாம்பிங் செயல்முறைக்கு முன்னால் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை கட்டணம் 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 4500 ஆக இருந்தது. புதிய கட்டணம் கடந்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. மேலும் கடந்த வாரம் முதல் மருத்துவ பரிசோதனை செய்தவர்களிடம் இருந்து புதிய கட்டணத்தின்படி தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றன.

குவைத் சட்டப்படி கட்டணத்தை உயர்த்தும் போது குவைத் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் கட்டாயம் என்பது விதிமுறை ஆகும். ஆனால் அமைச்சகம் அப்படியொரு புதிய கட்டண உயர்வு தொடர்பான முடிவை எடுத்ததாக தெரியவில்லை. குவைத்துக்கு விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு முன் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படும் 70 சதவீதம் பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பரவலான புகார்களும் நிலுவையில் உள்ளன.

இதில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள சில மருத்துவ பரிசோதனை மையங்கள் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு சட்டவிரோதமாக 35,000 முதல் 70,000 வரையில் வாங்கி கொண்டு மருத்துவ தகுதி சான்றிதழ்களை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படும் நபர்கள் முன்கூட்டி கட்டணம் செலுத்தினாலும், அதில் குறிப்பிட்ட சதவீதம் தொகையாவது திரும்ப வழங்கும் நடைமுறையும் பின்பற்றப்படுவது இல்லை, இதற்கிடையே இந்த மருத்துவ சோதனைக்கட்டணம் மீண்டும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகுறித்து குவைத்தில் உள்ள இந்திய அமைப்புகள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | New Fees

Add your comments to Kuwait News

Wednesday, September 18, 2024

25 தினார் அபராதம் விதிக்கப்படும் விதிமீறல் நடந்த இடத்தை பொறுத்து சிறை தண்டனைக்கும் வாய்ப்பு

குவைத்தில் உள்ள ஓட்டுநர் இனிமுதல் இதை செய்தால் 25 தினார் அபராதம் சிறை தண்டனையும் கிடைக்கும்

Image : ஓட்டுநர் ஹாரனை அடிப்பது தவறானது

25 தினார் அபராதம் விதிக்கப்படும் விதிமீறல் நடந்த இடத்தை பொறுத்து சிறை தண்டனைக்கும் வாய்ப்பு

குவைத்தில் வாகனத்தில் உள்ள ஹாரனை தவறாக பயன்படுத்துவது போக்குவரத்து விதிமீறலாகும். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுப் போக்குவரத்துத்துறை, வாகன ஹாரன்களை தவறாகப் பயன்படுத்துவது போக்குவரத்து விதிமீறலாக அறிவித்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் ஹார்னை தவறாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 25 தினார் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் விதிமீறல் நடந்த இடத்தை பொறுத்து, விதிமீறல் போக்குவரத்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது சிறைத் தண்டனைக்கும் வழிவகுக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் விபத்துகளைத் தடுக்க மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து விழிப்புணர்வு பிரிவு உதவி இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா புஹாசன் தெளிவுபடுத்தினார். பிறரை அழைப்பது மற்றும் பிறரை வாழ்த்துவது போன்ற காரியங்களுக்கு ஹாரனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சில ஓட்டுநர்கள் குடியிருப்பு பகுதிகளில் ஹாரனை தவறாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதால் முதியவர்கள், நோயாளிகள் உட்பட குடியிருப்பில் வசிக்கின்ற மக்கள் பெரிய அளவில் சிரமப்படுகின்றனர் என்பதும் துறையின் கவனத்துக்கு வந்துள்ளதாக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Road | New Fine | New Rule

Add your comments to Kuwait News

Tuesday, September 17, 2024

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்தனர் நாட்டின் சட்டங்களுக்கு அனைவரும் சமமே

Image : அமீர், இளவரசர் மற்றும் பிரதமர்

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

குவைத் நாட்டின் சட்டங்கள் மற்றும் இறையாண்மை மேல் யாரும் பெரியவர்கள் இல்லை என்ற செய்தி ஒருமுறை கூட அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா நாட்டு மக்களுக்கு காட்டும் விதமாக நாட்டின் அனைத்து குடிமக்களும் பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று சட்டத்தின்படி இன்று பயான் அரண்மனையில் துணைப் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல் யூசுப் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் பயோமெட்ரிக் கைரேகை செயல்முறையை முடித்தார்.

இதேபோல் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் மற்றும் நாட்டின் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா அவர்களும் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை பயான் அரண்மனையில் வைத்து முடித்தனர்.

மேலும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இம்மாதம் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்கவும் மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நாட்டில் வசிக்கின்ற வெளிநாட்டினர் அனைவரும் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Kuwait Update

Add your comments to Kuwait News

Monday, September 16, 2024

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் தின்னர் குடித்த வெளிநாட்டவரான தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image: Kuwait Police

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தின் ஜஹ்ரா மருத்துவமனையில் தற்செயலாக பெயின்ட் தின்னரை குடித்ததாக வெளிநாட்டவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருடன் வந்த வெளிநாட்டவரான நபர் கூற்றுப்படி இந்த சம்பவம் குவைத்தின் முட்டலா குடியிருப்பு பகுதி, N7, பிளாக் 3-இல் நடந்ததாக கூறினார். இது தற்செயலாக நடந்ததா இல்லை தற்கொலை முயற்சியா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆனால் தொழிலாளி எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நபிதின விடுமுறை நாளான நேற்று(15/09/24) ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to Kuwait News

Saturday, September 14, 2024

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,அரசர் குடும்பத்தினருமான ஷேக் ஜாபர் அல்-முபாரக் இன்று காலமானார்

Image : மறைந்த ஷேக் ஜாபர் அல்-முபாரக்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று(14/09/2024) சனிக்கிழமை தன்னுடைய 82-வது வயதில் காலமானார். கடந்த நவம்பர்-28,2011 முதல் 2019 வரை 8 ஆண்டுகள் குவைத்தின் பிரதமராக இருந்த அவர், ஜனவரி-4,1942 இல் பிறந்தார்.

1968 முதல் அமிரி திவானில் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களின் கண்காணிப்பாளர் நிர்வாக இயக்குனர் பதவிகள் வகித்த அவர். மார்ச் 1979 இல் நாட்டின் Hawally ஆளுநராக நியமிக்கப்பட்டார், தொடர்ந்து Ahamdi அஹ்மதி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சமூக விவகாரங்கள், தொழிலாளர் துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

பிப்ரவரி-14,2001அன்று ஷேக் ஜாபர் அல்-முபாரக் துணைப் பிரதமரும்,பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி-9,2006 அன்று முதல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அத்துடன் உள்துறை, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளையும் கவனித்து வந்தார். 2019ல் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Death Update

Add your comments to Kuwait News

Thursday, September 12, 2024

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் 20ம் நம்பர் விசா 18ம் நம்பருக்கு மாற்ற வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவிப்பு

Image : குவைத் வேலை வாய்ப்பு மைய‌ம்

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள்(Article-20) தங்களுடைய விசாவை தனியார்(Article-18) துறைக்கு மாற்றுவது தொடர்பான 2024 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்-6 இன்று(12/09/2024) வியாழக்கிழமையும் காலாவதியாகிறது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி(அதாவது இன்று வரையில்) ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இந்த கால அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல முதலாளிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரையில் விசா மாற்றம் பெற விண்ணப்பம் அளித்தவர்களின் பரிவர்த்தனைகள்(மனுக்கள்) பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏற்கனவே சுமார் ஐம்பதாயிரம் பேர் இந்த அறிவிப்பு மூலம் விசா மாற்றம் செய்து பயனடைந்துள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | Visit Visa

Add your comments to Kuwait News

Wednesday, September 11, 2024

3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது

குவைத் கடல் எல்லையில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 6 பேரை காணவில்லை

Image : விபத்தில் சிக்கிய அமல்

3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது

குவைத் கடல் எல்லையில் Ara Bakhtar-1 என்ற ஈரானிய வர்த்தக எண்ணெய் கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் கப்பலில் இருந்த 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் காணாமல் போன நிலையில் 3 பேர் உடலை குவைத் கடலோர காவல்படை வீரர்கள் மீட்ட நிலையில், மீதமுள்ள 3 பேரை கடலோர காவல்படை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காணாம‌ல் போன 3 பேரில் ஒருவரான இந்தியா, கேரளா மாநிலம் கண்ணூரை அடுத்த ஆலக்கோடு பகுதியை சேர்ந்த அமல் என்ற கப்பல் ஊழியரையும் காணவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்ற 3 பேர் ஈரானிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான கூடுதல் விபரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Kuwait News

Tuesday, September 10, 2024

குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

குவைத்தில் சஹால் செயலி மூலம் குடும்ப மற்றும் வீட்டு வேலை விசாக்களை தற்காலிக புதுப்பித்தல் செய்யலாம்:

Image credit: MOI OFFICIAL

குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

குவைத்தில் சஹால் ஆப் மூலம் குடும்ப(Article-22) மற்றும் வீட்டு வேலை விசாக்களின்(Article-20) தற்காலிக புதுப்பித்தல் சேவை தொடங்கப்பட்டது.

இதற்காக குவைத் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று Residency சேவை பிரிவை தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பெறும் வகையில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விசா புதுப்பித்தல் மையத்திற்கு நேரடியாக வராமலேயே ஆன்லைன் வழியாகவே தற்காலிக புதுப்பித்தல் செய்ய முடியும்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Sahel App | Kuwait Moi | New Features

Add your comments to Kuwait News

Saturday, September 7, 2024

குவைத் மருத்துவமனைகளில் இனிமுதல் பார்கிங் அனுமதி 48 மணிநேரம் மட்டுமே

குவைத் மருத்துவமனைகளில் இனிமுதல் பார்கிங் அனுமதி 48 மணிநேரம் மட்டுமே என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

Image : Kuwait Hospital

குவைத் மருத்துவமனைகளில் இனிமுதல் பார்கிங் அனுமதி 48 மணிநேரம் மட்டுமே

குவைத் சுகாதாரத்துறையின் புதிய முடிவுப்படி இனிமுதல் நாட்டில் உள்ள மருத்தவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வருகின்ற ஒருவர் தன்னுடைய வாகனத்தை அதிகபட்சமாக 48 மணிநேரம் மட்டுமே மருத்துவமனை வாளாக பார்கிங் இடங்களில் இனிமுதல் தன்னுடைய வாகனத்தை நிறுத்த முடியும்.

48 மணிநேரத்திற்கு மேல் வாகனத்தை நிறுத்தினால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இந்த புதிய முடிவு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிக‌ள், நோயாளிக‌ளை பார்க்க வருகின்ற நபர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த தேவையான இடத்தை உறுதி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலர் பல மாதங்களாக தன்னுடைய வாகனங்களை இப்படிப்பட்ட இடங்களை நிறுத்தி வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டித்துள்ளனர். எனவே இனிமுதல் எச்சரிக்கையாக இருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | New Rule | Kuwait Parking

Add your comments to Kuwait News

Tuesday, June 18, 2024

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும்

மங்காப் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் கும்பத்தினருக்கு 15000 டாலர்கள் இழப்பீடு என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த இந்தியர்கள்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும்

குவைத்தின் மங்காப் பகுதியில் 7 தமிழர்கள், 25 மலையாளிகள் என்று மொத்தமாக 49 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆவார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக பதினைந்தாயிரம் டாலர்கள்(சுமார் 5000 தினார்கள்) குவைத் அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் அரபு நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் இந்தத் தொகை விநியோகிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கு சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும். அதேபோல் உயிரிழந்த தொழிலாளர்கள் வேலை செய்த NTPC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஜி ஆபிரகாம் அவர்கள் கடந்த தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சமும், 4 ஆண்டு சம்பளத்துக்கு இணையான தொகையை காப்பீடு பணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதை தவிர தமிழக அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டு, உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் அதற்கான காசோலை குடும்பத்திடமும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு சார்பில் 2 லட்சமும் அறிவிக்கப்பட்டது.கேரளா அரசும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தால 5 லட்சம் இழப்பீடாக அறிவித்தது குறிப்பிடதக்கது. இதை தவிர உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு தொழில் அதிபர் யூசுப் அலி 3 லட்சமும், ரவி பிள்ளை 2 லட்சமும் அறிவித்து உள்ளனர்.

மங்காப் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் அந்த நேரத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பது அந்த நேரத்தில் வெளியிடப்படவில்லை. இந்த பயங்கரமான தீ விபத்தில் 7 தமிழர்கள், 25 மலையாளிகள் உட்பட 45 இந்தியர்களும், 3 பிலிப்பைன்ஸ் நாட்டினரும் உட்பட மொத்தமாக 49 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Kuwait News

Saturday, March 2, 2024

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்

குவைத்தில் பொதுமன்னிப்பு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

Image : ஷேக் ஃபஹத் அல் யூசுப் அவர்கள்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல் யூசுப் தெளிவுபடுத்தினார். இதற்காக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதகால அவகாசம் வழங்கப்படும். குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும் அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதியை அபராதம் செலுத்தி சட்டப்பூர்வமாக்கவும் அவகாசம் அளிக்கப்படும் என்று குவைத் அரசு செய்தி நிறுவனத்துக்கு சற்றுமுன் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி நாடு திரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் சட்டம் திட்டங்களுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் மீண்டும் குவைத்துக்குத் திரும்பி வருவதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். வாய்ப்பைப் பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் சுமார் 1,30,000 அளவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் கடைசியாக பொதுமன்னிப்பு கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொதுமன்னிப்பு அறிவிப்பு வழங்கப்படும் என்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தாலும் உள்துறை அமைச்சரிடமிருந்து முதல் முறை இது குறித்து உறுதிப்படுத்தல் அறிவிப்பு தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு எந்த நாளில் தொடங்கி எப்போது முடியும் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களில் எந்த பிரிவுகளில் வழக்குகள் நிலுவையிலுள்ள தொழிலாளிக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தும் உள்ளிட்ட விரிவான விபரங்கள் பொது மன்னிப்பு தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிடும் அறிவிப்பில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Kuwait News

Thursday, February 15, 2024

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தில் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேலை செய்வாதல் விபத்துகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது

Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தின் வேலைக்காக வந்த 34-வயது இளைஞர் Barr Al-Salmi பகுதியில் வேலை செய்து வந்த நிலையில் நேற்று(14/02/24) புதன்கிழமை பிற்பகல் உழவு இயந்திரத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்து Al-Shaqaya மையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

உடனடியாக அவரை அந்த இயந்திரத்தில் இருந்து மீட்டு எடுத்த போதும் துரதிர்ஷ்டவசமாக உழவு இயந்திரத்தில் சிக்கியதில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலாதிக்க விசாரணை மற்றும் கூடுதல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து வேலைகளை செய்யுங்கள். நேற்று முந்தினம் 20-வயது தமிழக இளைஞர் பத்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்திக்கு இடையில், இந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.அதற்கும் இரு தினங்களுக்கு முன்பு வெவ்வேறான இரண்டு விபத்துகளில் 2 எகிப்து தொழிலாளர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது குறிப்படத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Nepalil Worker | Kuwait News | Gulf Worker

Add your comments to Kuwait News

குவைத் சந்தைகளில் மீன் வாங்க செல்லும் முன்னர் இதை படித்துவிட்டு செல்லவும்

குவைத்தில் மீன் விலை கடந்த சில நாட்களாக சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது

Image : குவைத் மீன் சந்தை

குவைத் சந்தைகளில் மீன் வாங்க செல்லும் முன்னர் இதை படித்துவிட்டு செல்லவும்

குவைத்தில் வசிக்கின்ற சாதாரண மக்கள் மீன் மற்றும் மீன் சந்தை பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அனைத்து மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சுபைதி என்ற அரபு பெயருடைய உள்நாட்டில் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிற வெள்ளை அயோலியின் விலை சுமார் 11 தினாருக்கு விற்கப்படுகிறது. அதேநேரம் ஒன்பது குவைத் தினார்களுக்கு இணையான மத்தியில் அதே அவோலி பஹ்ரைனில் கிடைக்கும் போது இந்த விலை உயர்வு குவைத்தில் ஏற்பட்டுள்ளது.

அதாவது பஹ்ரைன் சந்தையுடன் ஒப்பிடும்போது, இதன் விலை குவைத்தில் இருபது சதவீதம் அதிகம். இதே மீன் கத்தாரில் ஒரு கிலோ சுமார் 2.2 குவைத் தினார்களுக்குச் சமம். கத்தாரின் விலையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 385 சதவீதம் ஆகும். சவுதி அரேபியாவில் 4.2 குவைத் தினார்களுக்கு சமமான சவுதி ரியாலுக்கு அதே ஆவோலி ஒரு கிலோ கிடைக்கும். இது மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள விலைகளுடன் ஒப்பிடுகையில் சவுதியை விட 161 சதவீதம் அதிகம் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளுடன் ஒப்படும் போது குவைத்தில் மீன் விலையில் பெரும் வித்தியாசம் இருப்பதாக உள்ளூர் செய்தித்தாள் தயாரித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

அதேபோல் குவைத்தில் ஒரு கிலோ ஹமோர் 4 தினார் என்றால், இதன் விலை கத்தாரில் 2.1 தினார் மற்றும் சவுதி அரேபியாவில் 2.2 தினார். இப்படியே போனால், ரம்ஜான் தொடங்கும் பட்சத்தில், நாட்டில் மீன் குறைந்த விலை சாமானியர்களுக்கு கிடைப்பது குறையும். மேலும் விலைவாசி தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உயரும் என நுகர்வோர்(மக்கள்) கவலையடைந்துள்ளனர். எனவே சாமானியர்கள் ருசியான மற்றும் தரமான மீன்களை வாங்காமல், எப்போதும் போல் சாதாரண வகை மீன்களை மட்டுமே வாங்கும் சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fish Market | Kuwait Market | Fish Price

Add your comments to Kuwait News

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை,தூசிக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City Weather Update

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(15/02/24) வியாழக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பமாக இருக்கும் மற்றும் ஓரளவு மேகமூட்டமாகவும். தென்கிழக்கு திசையில் இருந்து காற்று மணிக்கு 20-55 கிமீ வேகத்தில் வீசும் எனவும், குறைந்தபட்சம் வெப்பநிலை 19°C அளவுக்கும் அதிகபட்சமாக வெப்பநிலை 28°C அளவுக்கும் இருக்கும் மற்றும் தூசியை உண்டாக்கும் வாய்ப்புடன், சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலான தூசிக்காற்று தொடர்பான வானிலை எச்சரிக்கையையும் வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது நாட்டின் சில இடங்களில் தூரப்பார்வை திறனை குறையும் எனவும் மக்கள் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரிக்கை இருக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், தென்கிழக்கு காற்று மணிக்கு 15-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் தூசி காற்றுடன் மற்றும் அங்காங்கே மழைக்கான வாய்ப்பு உள்ளது, இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையாகவும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Kuwait News